"மாமனித மகுடம் நீ" சுவிஸ் தமிழர் பேரவை
[ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010, 12:39.17 மு.ப | இன்போ தமிழ் ]

 வியாபக விருட்சத்துக்கு விடை கொடுக்க முடியவில்லை என சுவிஸ் தமிழர் பேரவை இரங்கற்பாவூடே தேசியத்தலைவரின் தந்தைக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளது.

எங்கள் வியாபக விருட்சத்துக்கு விடை கொடுக்க முடியவில்லை
மாமனித மகுடம் நீ மறைந்து போகவில்லை

படம் நன்றி புதினம் நியூஸ்

விடியாத தேசத்துக்கு விளக்கேற்றி வைத்த வடிவே
வேங்கடவன் பெற்ற வேலுப்பிள்ளை எனும் உருவே
வெற்றித் திலகமிடும் விடுதலைப் பேரொளியை
வேங்கை யெனத்தந்த வேந்தே

சென்றுவா என்று சொல்லமுடியவில்லை
சென்ற இடமெல்லாம் வென்றுவரும் திருவை தந்தவனே எம்
நெஞ்சுபட்ட காயம் நீங்கும் முன்னாலே
வள்ளலே ஏன் வாய்மூடிக்கொண்டாய்

எத்தனை பேருக்கு எங்கள் தேசம்
மலரோடு மாமனிதர் மகுடம் சூட்டியது.
கொற்றவனைத் தந்த குலவிளக்கே குடியிருந்தவிடமெல்லாம்
கொடும் பகைவன் கால்பட்டுக்கிடக்கிறது

நெஞ்சு குன்றாத நாங்கள் நேரிழை தந்து,
நெருப்பு மூட்டுகின்றோம்
ஜம்பத்தி நான்கில் அன்னை மண்ணுக்கு
அணையா விளக்குத் தந்தவனே

இருண்ட எம் தேசத்துக்கு ஒளியேற்றி வைத்தவனே
இரண்டாயிரமாம் ஆண்டின் ஈரைந்து தன்னில்
நிமிர்வோம் எனவிருந்த வேளை நீ
நெருப்பேற்றி வைத்து நீண்ட தூரம் போகின்றாய்

நெஞ்சு கனக்கிறது நினைவு தடுமாறிப்போகிறது
வஞ்சம் கொண்ட வாழ்வால்
வாய்விட்டுக்கூட கதறியழமுடியவில்லை
வாழ்வு இப்படி யாகுமென்று யார்தான் முடுவுசெய்தார்

கரிகாலச் சோழனின் கருப்பொருளே
கல்லறைகள் கருத்தரிக்கும்
விழிமூடித்தூங்குகின்ற எங்கள் வேங்கைகளின் உதிரத்தில்
வேலுப்பிள்ளை நாமம் விடுதலைத் தீமூட்டும்

பார்வதித்தாய் பகலவனைக் கருவில் சுமந்த நாள்
கண் விழித்தாள் கடார புரத்துத் தாய்
ஜம்பத்தியாண்டுகாலம் தன் மடிசுமந்த மாமணியை
சுற்றிவர எதிரி சூழ்ந்ததனால்

உருமறைப்புச் செய்து ஊர்விட்டு அனுப்பிவிட்டாள்
வேங்கை மகன் வீடுதிரும்பும்போது
வேலுப்பிள்ளையின் கல்லறை
விடுதலைப்பேரொளியால் வியாபகம்பெறும்.

அதுவரை அண்ணலே அன்னை மண்ணில் நீயுறங்கு
நாடொன்றே நாடித் தன் நலமொன்றும் நாடா, நாயகனே
போர்க்கோலம் பூணும் புகழ் மிகுந்த மண்ணில்
தேர்க் கோலம் காணும் திருவே

தீருவில் வெளியில் தீயாகும் சுடரே
வாய்தீ யிற் புதைந்துபோக வல்லைமண்
என்னபழி செய்ததுவோ
ஏனிந்த நிலைதகுமோ

கூற்றுவன் தன் அழைப்பதனைக் கொடுத்தவுடன்
கொடுஞ்சிறையில் குலவிளக்கு அணைந்ததுவோ
விடுதலைப்பேரொளியின் வியாபக விருட்சம்
வீழ்ந்து கிடப்பதுவோ

புகழ்பூத்த புல்லாங்குழலொன்று
ஊதமுடியாத உருவமாய்க்கிடக்கிறது
ஈழத்தாயின் ஈடிணையில்லா இதய
நரம்பொன்று அறுந்து கிடக்கிறது

தாய்நிலத்து முற்றத்து தரவைச் சகனத்தில்
எங்கள் ராஜா குயிலின்
கூடுமட்டுமே
கொள்ளி வைக்கப்படுகிறது

எங்கள் தந்தையே உன்னைத் தரிசிப்பதெப்படி
சாவின் மாளிகைக்குச் சந்து கூடக்கிடையாது
சதிகாரர் சன்னிதானமாய் சரித்திரப்பூமி
சவக்காலைத் தெருவோடு சாய்ந்து கிடக்கிறது

உத்தமனே ஒன்றுமட்டும் உண்மை
எம் சந்ததி சபதமெடுத்து நிற்கிறது
தந்த செல்வா, தலைவன் காட்டிய பாதையில்
போராடப் புறப்பட்டு நிற்கிறது

குனிந்த தேசம் நிமிர்வு பெறும்
குமுறிய நெஞ்சு கொடிபிடிக்கும்
வானத்து தேவர் வாழ்த்துரைப்பர்
கோட்டையிலே உன்பிள்ளை கொடியேற்றுவான்

தாழ்வுற்ற தமிழுலகு தரணிபுகழேகும்
தலைவன் பாசறைகள் படைகொண்டேகும்
பார்வதி மணாளான் பாதத்திருவடிக்கு
பூச்சொரிந்து தேசம் புறநானூறுபாடும்

அப்பேறு அரியாசனப்பொருளே
வீதியெல்லாம் வெடிவெடித்து
வேங்கடவன் மகனுக்கு வேத இசையிசைக்க
வேலுப்பிள்ளை வரலாறு அவையேறும்

பார்வதியின் பரம்பொருளே
சென்றுவா என்று சொல்ல முடியவில்லை
செல்லும் இடமெல்லாம் வென்றுவரும் தலைவனோடு
உனை வணங்கும் நாள்வரைக்கும் நெஞ்சில்நிறுத்தியுனை.....

தமிழர் பேரவை
சுவிஸ்

சுவிஸ் தமிழர் பேரவை இரங்கற்பாவூடே

ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல