| வயது முதிர்ந்தவர்கள் தொடர்பில் உலக நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். |
| [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 09:12.32 பி.ப | ஊடகப் பணிமனை ] |
சுவிட்சர்லாந்தின் டவோசில் உலகப் பொருளாதார பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட சுவிஸ் விஞ்ஞானிகள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
வயது முதிர்ந்தவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மருத்துவம், ரோபோ தொழில்நுட்பம், உயிரியல் விஞ்ஞானம் என பல்வேறு துறைகளில் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிக் கரம் நீட்டக் கூடிய பல்வேறு வளர்ச்சிகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வயது முதிர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு விஞ்ஞான தொழில்நுட்ப உதவியை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், இந்த முயற்சிகளுக்கு அரசியல் ரீதியான ஆதரவு மிகவும் இன்றியமையாததென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் உலக வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் எனவும், இந்த நிலைமையை சமாளிப்பதற்கு முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. |
| புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010 |