சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணித்து நேற்று வியாழக்கிழமை [04-02-2010] பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் அருகே கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.
பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டு சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பிறசல்சில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இறுதி நேரத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும், பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க்கில் இருந்து பேருந்திலும், யேர்மனியில் இருந்து நான்கு பேருந்துகளிலும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

அக வணக்கத்தை தொடர்ந்து அயர்லாந்தைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோய் ஹிக்கின்ஸ், வன்னி சென்று பணியாற்றித் திரும்பியிருந்த மாதவன் ஐயா, பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திருமதி அரியரட்ணம், பேராசிரியர் ஜீலியா, பாலசந்திரன் போன்ற பலர் உரையாற்றினர்.


உரைகளின் இடையிடையே தமிழீழ எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டதுடன், இளையோர்களும், மக்களும் இணைந்து “எமக்கு வேண்டும் தமிழீழம்”, “ஐரோப்பிய ஒன்றியமே தமிழ் மக்களிற்கு உதவி செய்,” “மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் போர்க் குற்றவாளிகள்”, போன்ற கொட்டொலிகளை தமிழிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் எழுப்பினர்.
பிறசல்சில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இறுதி நேரத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும், பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க்கில் இருந்து பேருந்திலும், யேர்மனியில் இருந்து நான்கு பேருந்துகளிலும் மக்கள் வருகை தந்திருந்தனர்.
எமது செய்தித்தளத்தில் , இவைபற்றிய மேலதிக தகவல்களுக்கும் ஏனைய செய்திகளுக்கும் |