நேர்காணல் ஒலி ஒளி வடிவம்:
சிறிலங்காவுக்கு சென்று வந்த குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்
[ வெள்ளிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2009, 02:09.41 பி.ப | தமிழ் நாதம் ]

''பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக ஈழ‌த்த‌மி‌ழ் மக்கள் கதறி அழுதனர்'' எ‌ன்று ‌விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூ‌றினா‌ர்.

  • செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஈழத்தமிழர்களை நேரில் கண்டறிவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர். அதைத் தாண்டி எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பினால் நாங்கள் உழைத்து பிழைத்துக்கொள்வோம் என்பதை ஒருமித்த கருத்தாக கூறினார்கள். குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

    5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்கவில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை. பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.

    இந்த விவரங்களை எல்லாம் தொகுத்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் விளக்கி சொன்னோம். மழைக்காலத்திற்கு முன்னதாக அனைவரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் வற்புறுத்தினோம். அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் பேரை விடுவிப்பதாக ஒத்துக் கொண்டனர். உறவினர்கள் விண்ணப்பம் செய்த வகையில் 8 ஆயிரம் பேரையும், மொத்தம் 58 ஆயிரம் பேரை 2 வாரத்தில் அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி விட்டு மற்றவர்களையும் மீள் குடியமர்த்துவோம் என்று தெரிவித்தார்.

    இலங்கைக்கு சென்று வந்தது ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. "எங்களை பார்க்க முதல் முறையாக இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவிடம் சொல்லி எங்களை சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள்'' என்று அவர்கள் கதறி அழுதனர். முதல் கட்டமாக 58 ஆயிரம் பேரை வெளியேற அனுமதித்தது, எங்களுடைய பயணத்தால் கிடைத்த பயன் என்று கருதுகிறேன். மற்றவர்களையும் விடுவிக்கும் முயற்சியை இந்திய அரசு மூலமாக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொள்வார்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இலங்கை சிறையில் அடைபட்ட 40 இந்தியர்களை இந்தியாவில் உள்ள சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதியளித்துள்ளது எ‌ன்று திருமாவளவன் கூறினார்.

ets03

இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, "இலங்கையில் நடந்த போரின் போது பிரபாகரனோடு நீங்கள் இருந்திருந்தால் அவரோடு சேர்ந்து மறைந்திருக்க கூடும். உங்களை நான் இப்போது சந்திக்க முடியாமல் போயிருக்கலாம்'' என்று ராஜபக்சே கூறியது குறித்து திருமாவளவனிடம் கேட்டதற்கு, "என்னை அறிமுகம் செய்த போது இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன்'' என்று தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

வெள்ளிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2009
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. சிறீ லங்கா நாடாளுமன்றத்தில் கண்டதும் கேட்டதும்.........
  2. இரத்தக் கண்ணீர் வடிக்கபோகிறது சிறிலங்கா
  3. கரிகாலன் பிள்ளைகளே: புலிகளின் வீரமும் தியாகமும் பொய்யல்ல...மெய்யே....
  4. சீன, இந்திய ஆதரவுடன் மேற்குலகை எதிர்க்க துணிந்த சிறிலங்கா
  5. தமிழா நீ பேசுவது தமிழா?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியுடன் செயல்படுதல் என்பது: விடுதலைப்புலிகளின் " உறுப்பினர்கள் பற்றி" ஊடகங்களினூடாக எதிரிக்கு கட்டிக்கொடுப்பதே.
  2. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  3. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில்: போராட்டத்தைப் பொறுத்தவரையில் கே.பி முடிந்து போன ஒரு அத்தியாயம்
  4. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  5. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. மக்களை மதிக்கும் பண்பாடு விரிவடைய வேண்டும்: மக்களை முட்டாள்களாக நடத்தும் "இணையப் புலிகளுக்கு" மக்கள் தான் பதில் கூற வேண்டும்..........?
  2. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  3. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல